Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 மணி நேர வேலைக்கான மசோதா நிறுத்தி வைப்பு .. முதல்வர் உத்தரவு

12 மணி நேர வேலைக்கான மசோதா நிறுத்தி வைப்பு .. முதல்வர் உத்தரவு

By: vaithegi Tue, 25 Apr 2023 3:17:50 PM

12 மணி நேர வேலைக்கான மசோதா நிறுத்தி வைப்பு   ..   முதல்வர் உத்தரவு

சென்னை: மசோதாவினை நிறுத்திவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு .... தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, வேலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழிலாளர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படாமலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தொழிலாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர்.இதன் பின் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையே நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

chief minister,bill ,முதல்வர் ,மசோதா

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகளை ஈட்டுவதற்கும், இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்வை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் மட்டுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

ஆனால், தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் கருத்துப்படி ஏப்ரல் 23-ம் தேதி சட்ட மசோதாவில் ஒப்புதல் செய்யப்பட்ட 12 மணி நேர வேலை தற்போது நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :