Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவு

கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவு

By: Monisha Wed, 26 Aug 2020 4:33:36 PM

கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக அளவில் இதுவரை 2 கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 705 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 66 லட்சத்து 28 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 719 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 22 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 354 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.

covishield,vaccine,testing,chennai,chief minister edappadi palanisamy ,கோவிஷீல்டு,தடுப்பூசி,பரிசோதனை,சென்னை,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் பரிசோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :