- வீடு›
- செய்திகள்›
- புதுச்சேரியில் மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் ..முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் ..முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
By: vaithegi Sat, 11 Nov 2023 4:58:52 PM
புதுச்சேரி: இலவச லேப்டாப் விரைவில் வழங்க நடவடிக்கை .... .தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதன் வாயிலாக ஏராளமான மாணவர்கள் பள்ளி முடித்ததும் மடிக்கணினியை பற்றி அதன் வாயிலாக தொழில்நுட்ப அறிவையும் வேலை வேலை வாய்ப்புகளையும் பெற்று கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை போலவே புதுவையிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டு வருகிறது.
இதையடுத்து இது குறித்து பேசிய புதுவை முதல்வர் விரைவில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இன்று மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் காரைக்காலில் அரசு பள்ளி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
மேலும் சுற்றுலாவை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். அத்துடன் புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் மற்றும் அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.