Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் இந்த முறை மாணவர்களுக்கு இலவச சீருடை .. முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் இந்த முறை மாணவர்களுக்கு இலவச சீருடை .. முதலமைச்சர் ரங்கசாமி

By: vaithegi Fri, 26 Aug 2022 1:18:24 PM

புதுச்சேரியில் இந்த முறை  மாணவர்களுக்கு  இலவச சீருடை .. முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: இந்தியாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச சீருடை வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து புதுச்சேரியில் பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு புத்தகங்கள் அச்சிட அரசு அச்சத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த முறை பள்ளி மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை சீருடையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

chief minister rangasamy,free uniform , முதலமைச்சர் ரங்கசாமி ,இலவச சீருடை

மேலும் சுதானா நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள், ஜெனரேட்டர், மின்மாற்றி மற்றும் சுற்றுச்சுவர் போன்ற பணிகளை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் ரூ.13 கோடியே 25 லட்சத்துக்கு மதிப்பீடு செய்யப்பட்டு முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அரசாங்கத்துக்கு சொந்தமான காலியிடம் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அங்கு நூலக கட்டிடம் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Tags :