Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:34:53 PM

தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் தெரிவித்த கருத்து... தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; “இன்று வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை, திராவிடர் கொள்கையை முழுமையாக உள்வாங்கி உள்ளது.

chief minister,finance,m k stalin,report,tamil nadu, ,அறிக்கை, தமிழ்நாடு, நிதிநிலை, மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சர்

அனைத்து தரப்பு மக்களும் வாழ்நாள் முழுவதும் வாழ உதவும் பல நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத்தை சரி செய்யவும், நிதியை சரிசெய்யவும் கால அவகாசம் தேவைப்பட்டது. 2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்த்துள்ளோம்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தனி நபர் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி. எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும்.. வெல்லும். திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி, முழு பயன்களையும் மக்களுக்கு வழங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் பாடுபட வேண்டும்”. இவ்வாறு முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Tags :
|