Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல்காந்தி பதவி தகுதி நீக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ராகுல்காந்தி பதவி தகுதி நீக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 7:39:21 PM

ராகுல்காந்தி பதவி தகுதி நீக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ராகுல்காந்தி எம்.பி., பதவி தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, எம்.பி. ராகுல் காந்தியை அப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

crisis,disqualification action,m k stalin,parliament,rahul gandhi , தகுதி நீக்க நடவடிக்கை, நாடாளுமன்றம், நெருக்கடி, மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி

ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதித்தால் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும்.

நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது அழகல்ல. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|