Advertisement

வேலூரில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Thu, 02 Feb 2023 2:38:22 PM

வேலூரில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வேலூர்: வேலூரில் கள ஆய்வில் முதல்வர்... கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் சென்றார்.

கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூரில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

chief minister,m k stalin,vellore, ,மு.க.ஸ்டாலின், முதலமைச்சர், வேலூர்

கள ஆய்வு திட்டத்தின் கீழ் சத்துவாச்சாரியில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகளை சாப்பிட்டு தரத்தை சரிபார்த்தார்.

மேலும் வேலூர் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலையத்தை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து சுகாதார வளாக கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags :