Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

கேரளா மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Mon, 28 Aug 2023 7:41:40 PM

கேரளா மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மக்கள் அனைவரும் உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள பூர்வீகவாசிகள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்!

தமிழகத்தில் கன்னியாகுமரி கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு ஓணத்தினத்தன்றும், 2007-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக கருணாநிதி இருந்தபோது தலைநகர் சென்னைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

happy onam,m k stalin,malayalam natives ,சமத்துவம், மலையாள பூர்வீகவாசிகள், வளர்ச்சி

அறுவடைத் திருநாளாக மட்டுமின்றி, துரோகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிட மன்னன் மாவேலியை வரவேற்கும் திருவிழாவாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தகைய ஓணம் திருநாள் சங்க இலக்கியம் மதுரைக்காஞ்சியில் “மாயோன் மேய ஓண நன்னாள்” என்றும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.

இதனால், திராவிடப் பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாது, இருபக்க ஓணத்தைக் கூட விட்டுவைக்காமல், ‘வாமன ஜெயந்தி’ என்ற அடையாளத்தைப் பறிக்க ஒரு தரப்பு முயற்சிக்கிறது. இதுபோன்ற போராட்ட முயற்சிகளை கேரள மக்கள் புறக்கணிப்பார்கள்.

இந்த ஓணம் நாள் சமத்துவம், வளர்ச்சி மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியளிக்கும் நாளாக அமையட்டும்! தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக எதிர்வரும் ஆண்டாக அமையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :