Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நலம் ..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நலம் ..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By: vaithegi Tue, 07 Nov 2023 3:50:03 PM

முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நலம்  ..அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது , உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளார்.

ஃப்ளு வகை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது . முதலமைச்சருக்கு வந்திருப்பது மழை காலங்களில் வரும்.வைரஸ் காய்ச்சல் தான்; தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார்.எனவே விரைவில் முழுமையாக குணமடைவார் என அவர் கூறினார்.

minister m. subramanian,chief minister stalin ,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,முதலமைச்சர் ஸ்டாலின்

அதனை தொடர்ந்து பேசிய அவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி உதவித்தொகை விநியோகம் மீண்டும் துவங்கியது. 2018-ம் ஆண்டு முதல் விடுபட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ. 18,000 வழங்கப்படும்.

கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.18,000 இனி 3 தவணைகளாக வழங்கப்படும். கர்ப்பிணி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்ரம் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :