Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வருகிற செப்.15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வருகிற செப்.15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

By: vaithegi Tue, 13 Sept 2022 5:03:02 PM

அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்  வருகிற செப்.15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழக அரசு சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற செப். 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார்.

இதனையடுத்து இத்திட்டமானது முதற்கட்டமாக மதுரை மாநகரில் வருகிற செப். 15 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தும் பொருட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகி இருக்கிறது.

breakfast,chief minister stalin ,காலை சிற்றுண்டி, முதல்வர் ஸ்டாலின் ,

எனவே அதன் படி முதல்வர் தலைமையில் செப். 15 இத்திட்டம் துவங்கப்பட்டு அதன் பின் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற மாவட்ட பள்ளிகளில் செப். 16 அன்று துவங்க இருப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் செப். 15 முதல்வர் துவக்கி வைத்த பின், செப். 16 அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் எதாவது ஒன்றில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு திட்டம் தொடங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டம் தொடங்கப்பட்ட பின் அதை கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய்த் துறையினைச் சார்ந்த வருவாய்க் கோட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டம் தொடங்கப்படுவது குறித்து விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் மூலம் சமூக நல இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :