Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாட்னாவில் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

பாட்னாவில் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Fri, 23 June 2023 8:38:11 PM

பாட்னாவில் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

பாட்னா: பாட்னா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார்.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாஜகவை எதிர்க்கும் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதல்வர் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் பாட்னா சென்றுள்ளனர்.
இந்நிலையில், பாட்னா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார்.
மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆசி பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லாலு பிரசாத்துக்கு பரிசளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த தலைவர் லாலுபிரசாத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளோடு இருக்க வாழ்த்தினேன். நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

chief minister,lalu prasad yadav,m k stalin,meeting, ,சந்திப்பு, மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சர், லாலு பிரசாத் யாதவ்

Tags :