Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவசர கால கட்டுப்பாடு அறையை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

அவசர கால கட்டுப்பாடு அறையை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Sat, 03 June 2023 7:52:40 PM

அவசர கால கட்டுப்பாடு அறையை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையே பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சம்பவ இடம் முழுக்க இரத்தம், மனித உடல்களின் துண்டிக்கப்பட்ட உறுப்புகள் என்று கோரமாக காட்சியளிக்கிறது.

cm stalin,inspection,emergency management,dgp,principal secretary ,முதல்வர் ஸ்டாலின், ஆய்வு, அவசர கால கட்டுப்பாடு, டிஜிபி, தலைமை செயலாளர்

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர்பிழைத்தோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதனிடையே மீட்பு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரெயிலில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

விபத்து ஏற்பட்டதும் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதனிடையே சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
|