Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வரும் 17ம் தேதி பெங்களூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வரும் 17ம் தேதி பெங்களூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Fri, 14 July 2023 5:46:02 PM

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வரும் 17ம் தேதி பெங்களூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 17ம் தேதி பெங்களூரு செல்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கடந்த ஜூன் 13-ல் பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

bangalore,chief minister,important things,participates,congress ,பெங்களூர் ,முதலமைச்சர், முக்கிய விஷயங்கள், பங்கேற்கிறார், காங்கிரஸ்

வருகிற 17 மற்றும் 18ஆம் தேதியில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் தோழமைக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்கட்சிகள் 2வது கூட்டத்தில் பங்கேற்க வருகிற 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் இதற்கு . முன்னதாக 17ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. பாட்னா கூட்டத்தில் ராகுல் பங்கேற்ற நிலையில் பெங்களூர் கூட்டத்தில் சோனியா பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Tags :