Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவிக்க நாளை டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவிக்க நாளை டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:29:29 PM

பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவிக்க நாளை டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். அவரது உடல் தகனம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்து முடிந்தது.

இதையடுத்து, பிரதமர் மோடியிடம் துக்கம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்ப தாமதம் ஏற்பட்டதால் முதல்வர் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

chief minister stalin,prime minister modi,to offer condolences to,visit delhi tomorrow, ,டெல்லி பயணம், துக்கம் விசாரிக்க, பிரதமர் மோடி, முதல்வர்

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

தமிழ்நாடு இல்லம் சென்று தங்கும் அவர் பிரதமர் மோடி டெல்லி திரும்பியதும் தாயார் மறைவுக்கு அவரிடம் துக்கம் விசாரிக்கிறார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புவார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :