Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

By: vaithegi Tue, 25 July 2023 09:55:22 AM

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு ... பாமக நிறுவனர் ராமதாஸின் 85 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவரி என்னும் ஊரில் பிறந்தார் ராமதாஸ். இவர் தந்தை சஞ்சீவராய கவுண்டர், இவரது நவநீத அம்மாள்.

மருத்துவக் கல்வி பயின்ற ராமதாஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இதனையடுத்து 1980ல் வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். 1990-இல் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

chief minister stalin,bamaka founder ramadoss ,முதல்வர் ஸ்டாலின்,பாமக நிறுவனர் ராமதாஸ்

இதையடுத்து கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக மதுவிலக்குக்கு போராடி வரும் இவர் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனியாக கல்வி வேலை வாய்ப்புகளில் 20 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் .மேலும் அத்துடன் பசுமைத்தாயகம் என்னும் சமூக நல செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றி உள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்! என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :