Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முதல் -அமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முதல் -அமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

By: vaithegi Thu, 01 Dec 2022 10:48:19 AM

சென்னை அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்களுடன் முதல் -அமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: இன்று ஆலோசனை ...... திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதனை அடுத்து இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றன.

தற்போதைய கூட்டணியில் எந்த கட்சியை கூடுதலாக சேர்க்கலாம் என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட இருக்கின்றன.

stalin,counsel ,ஸ்டாலின் ,ஆலோசனை

அதனை தொடர்ந்து மாவட்டங்களில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு, அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே அரசு பணி கான்ட்ராக்ட் தொடர்பாக நிலவும் பனிப்போர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது .

மேலும் அப்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டிப்பு காட்டுவார் முதல்வர் என்று கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன .

Tags :
|