தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பு
By: vaithegi Sat, 01 July 2023 11:17:25 AM
சென்னை: மருத்துவர்கள் தினம் , முதல்வர் வாழ்த்து .... இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 2-வது முதல்வர் என்ற பெருமைக்குரிய மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இதனை அடுத்து 1882 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி தனது 80 வது வயதில் மறைந்தார்.
முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்த இவரின் சேவையை நினைவு கூறும் வகையில் ஜூலை 1- ம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது, தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #DoctorsDay வாழ்த்துகள்! மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.