Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Fri, 12 May 2023 2:51:14 PM

உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச செவிலியர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச தினமாகும் , இது செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைக் குறிக்கும் .

சர்வதேச செவிலியர் கவுன்சில் 1965 -ம் ஆண்டு முதல் இந்நாளைக் கொண்டாடி வருகிறது. 1953 -ம் ஆண்டில் அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட், ஜனாதிபதி டுவைட் டி. ஐசன்ஹோவர் "செவிலியர் தினத்தை" பிரகடனப்படுத்த முன்மொழிந்தார்; ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

principal,world nurses day ,முதல்வர் ,உலக செவிலியர் தினம்

இதனை அடுத்து ஜனவரி 1974 இல், நவீன செவிலியர்களின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் என்பதால் மே 12--ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது .

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்! என அவர் பதிவிட்டு உள்ளார்.

Tags :