Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூலை 29-ல் திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

ஜூலை 29-ல் திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

By: vaithegi Mon, 24 July 2023 09:45:26 AM

ஜூலை 29-ல் திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திமுக இளைஞர்ணியின் நிர்வாக கூட்டம் வருகிற ஜூலை 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. திமுகவில் இளைஞரணி, மாணவர் அணி உள்ளிட்ட 25 அணிகள் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வரும் நிலையில், மாநில மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமிக்க சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து அதன்படி 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அனைத்து அணிகள் குழுக்களிலும் நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

chief minister stalin,dmk girl ,முதல்வர் ஸ்டாலின்,திமுக இளைஞரணி

இந்த நிலையில் இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வருகிற 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதனை அடுத்து காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடுவது ஒன்றிய, நகர, பேரூர்களின் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags :