Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை முதல்வர் சுக்விந்தர் தாக்கல் செய்தார்

காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை முதல்வர் சுக்விந்தர் தாக்கல் செய்தார்

By: Nagaraj Sun, 19 Mar 2023 1:28:14 PM

காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை முதல்வர் சுக்விந்தர் தாக்கல் செய்தார்

சிம்லா: ஆட்சி அமைத்த பிறகு காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை சட்டப் பேரவையில் சுக்விந்தர் தாக்கல் செய்தார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து, முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். மாநிலத்தில் ஆட்சி அமைத்த பிறகு காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை சட்டப் பேரவையில் சுக்விந்தர் தாக்கல் செய்தார்.

பின்னர் 2023-24ம் ஆண்டுக்கான ரூ.53,413 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

chief minister,green state,himachal pradesh,notification,sukhwinder,target, ,அறிவிப்பு, இமாச்சல பிரதேசம், இலக்கு, சுக்விந்தர், பசுமை மாநிலம், முதல்-மந்திரி

அதன்படி, “இமாச்சல பிரதேசத்தில் இனிமேல் விற்கப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் ரூ.10 செஸ் வரி விதிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அந்த பணம் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும்” என்றார்.

மேலும், சுக்விந்தர், “பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும், அதில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு ரூ.416 கோடி கூடுதலாக செலவாகும்.

இமாச்சலப் பிரதேசத்தை பசுமை மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026. இதற்காக, மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும்.” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை சுக்விந்தர் வெளியிட்டார்.

Tags :
|