Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் வலியுறுத்தல்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 28 Sept 2020 8:22:38 PM

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் வலியுறுத்தல்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மொழி பாகுபாடு இன்றி இந்தியாவில் பல மொழிகளில் பாடியுள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கோனேட்டம்பேட்டையாகும்.

எஸ்.பி.பி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக கங்கை அமரன், எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது கிடைக்க நிச்சயம் முயற்சி செய்வேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர்களான அர்ஜுன், விவேக், ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

எஸ்.பி.பி. நாற்பதாயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் மாநில விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

sbp,bharat ratna award,chief minister of andhra pradesh,letter ,எஸ்.பி.பி., பாரத ரத்னா விருது, ஆந்திரா முதல்வர், கடிதம்

Tags :
|