Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கை நீட்டிப்பதா?...நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பதா?...நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை

By: Monisha Tue, 28 July 2020 12:28:12 PM

ஊரடங்கை நீட்டிப்பதா?...நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் தற்போது சென்னையை தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

tamil nadu,corona virus,curfew,cm,consultation ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,முதலமைச்சர்,ஆலோசனை

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பின்னர் அறிவிப்பு வெளியாகும்.

மேலும் நாளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளுகிறார். இந்த இரண்டு ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|