Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்க்கரை ஆலைக்காக 77 டிராக்டர்களை தொடக்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

சர்க்கரை ஆலைக்காக 77 டிராக்டர்களை தொடக்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

By: Nagaraj Tue, 07 Mar 2023 5:38:28 PM

சர்க்கரை ஆலைக்காக 77 டிராக்டர்களை தொடக்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கூட்டுறவு கரும்பாலை மற்றும் சர்க்கரை ஆலைக்காக 77 டிராக்டர்களை முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, ஹோலி பண்டிகையையொட்டி கரும்பு விவசாயிகளுக்கு இன்று ஒரு வரலாறு படைக்கும் நாளாக போகிறது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சம் கோடி பணம் இன்று நேரடியாக செலுத்தப்பட உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில், ஆண்டு பட்ஜெட் கூட ரூ.2 லட்சம் கோடி இல்லை என அவர் சுட்டி காட்டி பேசினார். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை கரும்பு விவசாயிகள், நீர்ப்பாசனத்திற்கான போதிய நீர் வசதி, மின்சாரம் கிடைக்காமல், சரியான நேரத்தில் தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற முடியாமல் தங்களது பயிர்களை எரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

going,holi,sugarcane,until, ,கரும்பாலை, கூட்டுறவு, பணம், யோகி ஆதித்யநாத்

அவர்கள் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கி தவித்தனர். கடன் கொடுப்பவர்களை சார்ந்து இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, 2.60 கோடி விவசாயிகள் பிரதமர் மந்திரியின் கிசான் சம்மான் அட்டை வழியே வசதியைப் பெறுகிறார்கள். அவர்களை நாங்கள் சிக்கலில் இருந்து விடுவித்து உள்ளோம். கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டுமே, அவர்களது கணக்குகளில் ரூ.51 ஆயிரம் கோடி நிதியை பரிமாற்றும் பணியை செய்து வருகிறோம் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு வளர்ச்சி துறை மந்திரி சவுத்ரி லட்சுமி நாராயண், தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா, வேளாண்மை உற்பத்தி ஆணையாளர் மனோஜ் சிங், கூடுதல் தலைமை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி, முதன்மை உள்துறை செயலாளர் சஞ்சய் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
|
|
|