Advertisement

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பு

By: vaithegi Sat, 21 Oct 2023 4:10:34 PM

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06கோடி குடும்ப தலைவிகள் பயனடைந்து கொண்டு வருகின்றனர். தற்போது வரையிலும் 2 மாதத்திற்கான உரிமைத்தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கபட்டுள்ளது.

அதே போன்று ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு 14 அல்லது 15ம் தேதிகளில் பணம் வழங்கப்பட்டு விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் குறித்து முதல்வர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

principal,franchise scheme ,முதல்வர் ,உரிமைத்தொகை திட்டம்

அதாவது, சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக அறிவித்த போது பலரும் ரூ.1000 வழங்குவது சாத்தியமல்ல என கூறியதாக முதல்வர் அறிவித்துள்ளார். தொடர்ந்து அரசின் நிதி நிலைமையும் மோசமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் நானே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க முடியுமா என்று பயந்தேன் என முதல்வர் அறிவித்துள்ளார்.

எனவே இதன் பின்னர், பல போராட்டங்களுக்கு பிறகு குடும்பத் தலைவிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

Tags :