Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அறிவிப்பு

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Mon, 01 May 2023 10:28:45 AM

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அறிவிப்பு

சென்னை: 12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது ... தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா ஏப்ரல் 21-ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிர்க்கட்சிகள் கூடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், " 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று நான் அறிவிக்கிறேன்.

opposition parties,12-hour work bill ,எதிர்க்கட்சிகள் ,12 மணிநேர வேலை சட்ட மசோதா

12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது.

மேலும் இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. இதை நான் பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர்" என அவர் கூறினார்.

Tags :