Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் உத்தரவு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் உத்தரவு

By: Nagaraj Mon, 23 Nov 2020 11:09:16 PM

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் உத்தரவு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை... நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், நாளை மறுதினம், மாமல்லபுரம்- - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இப்புயல் வீசுவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று துவங்கி, வரும், 26ம் தேதி காலை வரை, மாநிலம் முழுதும், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாளை, 'நிவர்' புயலாகவும் வலுவடையும். இந்த புயல், வங்க கடலின் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் பகல் அல்லது பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம். இந்நிலையில் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

precaution,order,collectors,never storm ,முன்னெச்சரிக்கை, உத்தரவு, கலெக்டர்கள், நிவர் புயல்

நிவர் புயல் பாதிப்பு எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் வரும் 24, 25 தேதிகளில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை நாளை மதியம் 1 மணி முதல் புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களை போதியளவு கையிருப்பில் வைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|