Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகள்: விழுப்புரத்தில் பரபரப்பு

குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகள்: விழுப்புரத்தில் பரபரப்பு

By: Nagaraj Sat, 19 Aug 2023 07:00:38 AM

குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகள்: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகளால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு இதுபோன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

gulpi ice,sales,mystery man,vikravandi,cops,children ,குல்பி ஐஸ், விற்பனை, மர்ம நபர், விக்கிரவாண்டி, போலீசார், குழந்தைகள்

3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் முட்டத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|