Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரியவர்களை விட கொரோனா வைரஸை சிறப்பாக சமாளிக்கும் குழந்தைகள்

பெரியவர்களை விட கொரோனா வைரஸை சிறப்பாக சமாளிக்கும் குழந்தைகள்

By: Karunakaran Thu, 02 July 2020 1:07:58 PM

பெரியவர்களை விட கொரோனா வைரஸை சிறப்பாக சமாளிக்கும் குழந்தைகள்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸுக்கு எதிராக தற்போது உலகமே போராடி வருகிறது. இந்த கொரோனாவால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக எளிதில் பாதிப்படைவர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக தினசரி பள்ளிக்கூடம் செல்ல முடியாமலும், சக குழந்தைகளுடன் நினைத்த நேரத்தில் விளையாட முடியாமலும், நண்பர்களை சந்தித்து பேச முடியாமலும் குழந்தைகள் உள்ளனர்.

பார்க், பீச், ஓட்டல், மால், தியேட்டர் எல்லாமே இப்போது கனவாக மட்டும் உள்ளது. வீட்டுச்சிறையில்அடைத்து வைக்கப்பட்டது போல குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிப்பதாக அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

childrens,coronavirus,corona prevence,america ,குழந்தைகள், கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு, அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புடைய 7,500 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மருத்துவ தரவுகளை விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர். அதில், ஐந்தில் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் தெரிவதில்லை என தெரிய வந்துள்ளது. 5.6 சதவீத குழந்தைகள் மட்டும்தான் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

3 சதவீதத்துக்கும் சற்று அதிகமான அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தீவிரமடைந்துள்ளது. குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வெளியே வருகிற சிறப்பான சக்தியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Tags :