Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை, வெள்ளத்தால் உள்கட்டமைப்புகள் சிதறி தவிக்கும் சீனா, பாகிஸ்தான்

மழை, வெள்ளத்தால் உள்கட்டமைப்புகள் சிதறி தவிக்கும் சீனா, பாகிஸ்தான்

By: Nagaraj Mon, 31 Aug 2020 12:52:32 PM

மழை, வெள்ளத்தால் உள்கட்டமைப்புகள் சிதறி தவிக்கும் சீனா, பாகிஸ்தான்

சீனா மற்றும் பாகிஸ்தானில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் உள்கட்டமைப்புகளை சிதறடித்து வருகின்றது இயற்கையின் கோரத்தாண்டவம்.

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் சீனாவின் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன.

நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நம்ம ஊர் அரசியல் வாதிகளால் சுட்டிக்காட்டப்பட்ட சீனாவின் 3 முக்கிய அணைகள் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் முக்கிய சாலைப்பகுதி ஒன்று மூன்றே நிமிடங்களில் பெரும் வெள்ளக்காடாகி இயற்கைக்கு முன்பு வல்லரசுகள் எல்லாம் வெறும் டல்லரசுகள் தான் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

china,pakistan,infrastructure,habitats,public ,சீனா, பாகிஸ்தான், உள்கட்டமைப்புகள், வாழ்விடங்கள், பொதுமக்கள்

கார்கள், கனரக வாகனங்கள் எல்லாம் காற்றடைத்த பனூன்கள் போல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. யாங்ட்சி நதியின் குருக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மழை, வெள்ளத்தால் சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

அதே போல பாகிஸ்தானின் கராய்ச்சி நகரம் கனமழை வெள்ளத்தால் மெல்ல கரைந்து கொண்டிருக்கின்றது. அவசர உதவிக்கு ஆயுதத்துடன் வந்த பாகிஸ்தான் போலீஸ் வாகனம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. காவலர்கள் அதில் இருந்து குதித்து தப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

சீனாவின் கட்டமைப்புகள் சிதறியுள்ள நிலையில் கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தான் இந்த வெள்ளதால் பதறிக் கிடக்கின்றது.
கார்களும், பேருந்துகளும் வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் சாலையில் தவித்து நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் அரசால் மீட்பு பணிகளில் தீவிரம் காட்ட இயலாததால், ஏராளமான பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

Tags :
|