Advertisement

தனது ராணுவத்திற்கான பட்ஜெட் தொகையை அறிவித்தது சீனா

By: Nagaraj Sat, 23 May 2020 1:42:10 PM

தனது ராணுவத்திற்கான பட்ஜெட் தொகையை அறிவித்தது சீனா

சீனா, தன் ராணுவ பட்ஜெட்டுக்கு, 13 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்திய ராணுவ பட்ஜெட்டை விட, மூன்று மடங்கு அதிகமாகும். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ராணுவத்திற்காக அதிக தொகையை செலவு செய்வது சீனாதான்.

கடந்த 2019ல், 13 லட்சத்து, 35 ஆயிரம் கோடி ரூபாயை, சீனா, ராணுவ பட்ஜெட்டுக்கு ஒதுக்கியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


military budget,funding,usa,report ,
ராணுவ பட்ஜெட், நிதி ஒதுக்கீடு, அமெரிக்கா, அறிக்கை

இதில், 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய், ராணுவ பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, ராணுவத்துக்கான பட்ஜெட் அதிகம் உயர்த்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தியா, 2020ல் ராணுவ பட்ஜெட்டுக்கு, 4 லட்சத்து, 71 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த தொகை சீனாவை விட, 2.7 மடங்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

military budget,funding,usa,report ,
ராணுவ பட்ஜெட், நிதி ஒதுக்கீடு, அமெரிக்கா, அறிக்கை

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2019ல், சீனா, 17 லட்சத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவத்துக்கு செலவு செய்ததாக கூறப்பட்டது. ராணுவத்தை விரிவுபடுத்துவதிலும், அதிநவீன போர் கருவிகளிலும் சீனா அதிக தொகையினை செலவிடுவதாகவும், அதை, சர்வதேச நாடுகளிடம் இருந்து மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து, சீன அரசின் செய்தி தொடர்பாளர், ஸாங் யெசூய், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவ செலவினங்களில், சீனா வெளிப்படை தன்மையுடனேயே செயல்படுகிறது. இதில், எந்த ஒளிவு மறைவும் கிடையாது.

ராணுவ செலவினங்கள் குறித்த அறிக்கையை, 2007 முதல், ஐ.நா.,விடம், ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறோம். ராணுவத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. அவை, எதற்கெல்லாம் செலவிடப்பட்டன என்ற அனைத்து விபரங்களும், அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags :
|