Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கொரியர்களின் விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவிப்பு

தென்கொரியர்களின் விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவிப்பு

By: Nagaraj Wed, 11 Jan 2023 10:18:48 PM

தென்கொரியர்களின் விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: சீனப் பயணிகளுக்கு தென் கொரியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக, தென் கொரியர்களுக்கான விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

cancel,south korean people,visa, ,தென்கொரிய மக்கள், ரத்து, விசா

சீனப் பயணிகளுக்கு தென் கொரியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக, தென் கொரியர்களுக்கான விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனப் பயணிகளுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கைகளை தென் கொரியா நீக்கும் வரை, அந்நாட்டிலிருந்து சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சீனாவுக்கு வருபவர்களுக்கான விசாக்கள் நிறுத்தி வைக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|