Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

By: Nagaraj Fri, 17 June 2022 11:42:15 PM

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

ஐக்கிய நாடுகள்: சீனப் போட்ட முட்டுக்கட்டை... பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள்படி தான் செய்துள்ளதாக கூறி தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தி உள்ளது.மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மக்கி(74). பாகிஸ்தானில் உள்ள அவனை, பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

terrorism,china,opposes,india,america,stalemate ,பயங்கரவாதம், சீனா, எதிர்க்கிறது, இந்தியா, அமெரிக்கா, முட்டுக்கட்டை

அவனது சொத்துகளை முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, ஐ.நா., சட்டங்களின்படி, அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கையில் இறங்கின.


ஆனால் பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறுத்தி வைத்துள்ளது.இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது: பயங்கரவாதத்தை சீனா அனைத்து வகைகளிலும் எதிர்க்கிறது.

Tags :
|
|