Advertisement

ஏர்பஸ்களை வாங்கிய சீனா... ஏமாற்றமடைந்த போயிங் நிறுவனம்

By: Nagaraj Sat, 02 July 2022 7:54:40 PM

ஏர்பஸ்களை வாங்கிய சீனா... ஏமாற்றமடைந்த போயிங் நிறுவனம்

அமெரிக்கா: ஏமாற்றமடைந்த போயிங் நிறுவனம்... சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான China Southern, Air China, Shenzhen Airlines and China Eastern ஆகிய நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 37 பில்லியன் டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

america,china,trade war,big loss,flight,disappointment ,அமெரிக்கா, சீனா, வர்ததகப்போர், பெரிய இழப்பு, விமானம், ஏமாற்றம்

இதன் காரணமாக தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏமாற்றமடைந்துள்ளது.

அதேவேளை அமெரிக்கா சீனா இடையே கடும் வர்த்தகப் போர் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு அமெரிக்கா செய்த பல்வேறு தடைகளுக்கு பழிக்குபழி வாங்கவே சீனா இப்படி ஏர்பஸ்களை வாங்கி போயிங் நிறுவனத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|