Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு திரும்ப விரும்பும் குடிமக்களை திருப்பி அனுப்ப சீனா முடிவு

நாடு திரும்ப விரும்பும் குடிமக்களை திருப்பி அனுப்ப சீனா முடிவு

By: Monisha Tue, 26 May 2020 11:16:09 AM

நாடு திரும்ப விரும்பும் குடிமக்களை திருப்பி அனுப்ப சீனா முடிவு

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 213 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 54 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உள்ளது. 3.4 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் சீனா உகானில் இருந்து சுமார் 700 இந்தியர்களை வெளியேற்றியது.

நாடு தழுவிய ஊரடங்கு இரண்டு மாதங்களாக அமலில் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1.38 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த பலி எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில் நாடு திரும்ப விரும்பும் குடிமக்களை திருப்பி அனுப்ப சீனா முன்வந்துள்ளது. திங்களன்று, சீன தூதரகத்தின் இணையதளத்தில் மாண்டரின் மொழியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, வீடு திரும்ப விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் சிறப்பு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

china,corona virus,citizens,chinese embassy,​​india ,சீனா,கொரோனா வைரஸ்,குடிமக்கள்,சீன தூதரகம்,இந்தியா

சீனத் தூதரகத்தின் அறிவிப்பில், திரும்பிச் செல்ல விரும்புவோருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து கொண்டது. நோய்த்தொற்றைப் பிடிக்காத அல்லது காய்ச்சல் அல்லது இருமல் போன்ற கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறைகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டின் மூலம், இந்தியாவில் உள்ள சீன இராஜதந்திர மற்றும் தூதரக பணிகளில் உள்ள சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தற்காலிக வணிக பார்வையாளர்கள் தற்காலிக விமானம் மூலம் திரும்ப செல்ல வேண்டிய அவசியத்தில் உள்ளன. இவ்வாறு சீனா அறிவித்துள்ளது.

Tags :
|