Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை - சீனா

இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை - சீனா

By: Monisha Wed, 17 June 2020 5:38:51 PM

இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை - சீனா

இந்தியா - சீனா எல்லையான கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்துசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறார்கள். இந்த எல்லைப் பிரச்சினையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேசித் தீர்க்க வேண்டும்.

india,china,border dispute,ladakh,negotiations ,இந்தியா,சீனா,எல்லை பிரச்சனை,லடாக்,பேச்சுவார்த்தை

எல்லையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இந்திய ராணுவம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்கிறோம். சீன ராணுவத்தினரைச் சீண்டுவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, சரியான பாதையில் எல்லையில் ஏற்பட்ட சிக்கல்களை அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவே விரும்புகிறோம்.

நிர்வாகரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தை தொடரும். சரியோ, தவறோ இதைத் தெளிவாகக் கூறுகிறோம். இந்தத் தாக்குதல் சம்பவம் சீனாவின் எல்லைக்குள் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்ததால் சீனா மீது பழிபோட முடியாது. இப்போது கல்வான் பள்ளதாக்கு பகுதி நிலையாகவும் கட்டுக்கோப்பாகவும் அமைதியாக இருக்கிறது. சீனா இந்தியாவுடன் அதிகமான மோதல் போக்கை விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|
|
|