Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஜிபூட்டி தீவில் சீனாவின் ஆதிக்கம்

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஜிபூட்டி தீவில் சீனாவின் ஆதிக்கம்

By: Nagaraj Sat, 20 Aug 2022 11:27:06 AM

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஜிபூட்டி தீவில் சீனாவின் ஆதிக்கம்

புதுடில்லி: சீனாவின் ஆதிக்கம்... ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டியில் சீனா ஆதிக்கம் செலுத்துவது இந்தியாவுக்கு மற்றுமொரு அதிர்வை கொடுத்திருக்கிறது.

இந்தியப் பெருங்கடலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக இந்தியாவைச் சுற்றி ஓா் ஆதிக்க வலையை சீனா விரித்து வருவதாக இந்தியாவும் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது.

சீனாவின் இந்த சுற்றி வளைப்பு சீனா - இந்தியாவுக்கிடையில் அரசியல் ரீதியிலான அமைதியின்மையை தோற்றுவிப்பது மாத்திரமல்லாமல், பிராந்திய ரீதியில் ஓா் அரசியல் முறுகலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவைக் குறி வைக்கும் வகையில் சீனா ஜிபூட்டி கடற்படை தளத்தில் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

இந்திய - பசிபிக் பகுதியில் இது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்த நாட்டை தாண்டியும் பல்வேறு இடங்களில் இராணுவ தளங்கள் உள்ளன. அதேபோல துருக்கி, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் சொந்த நாடுகளைக் கடந்து இராணுவ தளங்கள் உள்ளன.

china,djibouti site,information,hype,visit,spy ship ,சீனா, ஜிபூட்டி தளம், தகவல்கள், பரபரப்பு, வருகை, உளவுக்கப்பல்

போர் அல்லது சண்டை ஏற்படும் போது, எதிரி நாடுகளைத் தாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். சீனாவும் இதேபோல் தனது நாட்டுக்கு வெளியே இராணுவ தளம் வேண்டும் என்று எண்ணி இதற்கான வேலைகளை 2016இல் தொடங்கியது.

இவ்வாறான தளத்தை அமைப்பதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடான ஜிபூட்டி. இந்தத் துறைமுகம், இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலைப் பிரிக்கும் பாப் - எல் - மண்டேப் ஜலசந்தியால் அமைந்துள்ளது.

குறிப்பாகச் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்துள்ளது சீனாவின் இந்த ஜிபூட்டி தளம் ஒரு நவீன காலனித்துவ கோட்டையைப் போலக் கட்டப்பட்டுள்ளதாகவும் இது நேரடித் தாக்குதலைத் தாங்கும் வகையில் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தளத்தில் கட்டுமான பணிகள் இன்னுமும் முழுமையாக முடியவில்லை என்றாலும் கூட தளத்தை முழு வீச்சில் சீனா பயன்படுத்தத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, சீனாவின் முக்கிய கப்பலான சாங்பாய் ஷான் அங்கு இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. 25,000 டன் எடையுள்ள இந்தக் கப்பல் சீனாவின் முக்கிய பாதுகாப்பு கப்பலாகக் கருதப்படுகிறது.

மிகப் பெரிய இந்தக் கப்பலே எளிதாக உள்ளே வந்து வெளியே செல்லும்படியாக சீனா தனது ஜிபூட்டி தளத்தைக் கட்டமைத்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் சீனா தனது வெளிநாட்டுத் தளங்களை எப்படி உருவாக்கி வருகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.


இப்போது இலங்கையில் இருக்கும் யுவான் வாங் - 5 கப்பலால் இந்தியாவில் இருக்கும் செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் சீன உளவுக் கப்பலின் வருகையைப் பெரிய சந்தேகத்துடன் இந்தியா உற்றுநோக்கி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஜிபூட்டி தளம் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Tags :
|
|
|