Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுற்றுலா பயணிகளைக் கவர 6 நாடுகளுக்கு சீனா வழங்கிய அனுமதி

சுற்றுலா பயணிகளைக் கவர 6 நாடுகளுக்கு சீனா வழங்கிய அனுமதி

By: Nagaraj Mon, 27 Nov 2023 10:08:27 AM

சுற்றுலா பயணிகளைக் கவர 6 நாடுகளுக்கு சீனா வழங்கிய அனுமதி


சீனா: விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது. விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது.

china,6 nationalities,visa,permit,tourism,france ,சீனா, 6 நாட்டு மக்கள், விசா, அனுமதி, சுற்றுலா, பிரான்ஸ்

அதன்படி ,வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு மக்களும் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என சீனா அறிவித்துள்ளது.

சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|