Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறிய சீனா

தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறிய சீனா

By: Karunakaran Sat, 08 Aug 2020 09:35:48 AM

தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறிய சீனா

சீனாவுக்கும், ஏழை நாடான தஜகிஸ்தானுக்கும் இடையே 2010-ஆம் ஆண்டில் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாமீர் பகுதியில் ஆயிரத்து 158 சதுரகிலோ மீட்டர் பரப்பை சீனாவிற்கு விட்டுக்கொடுக்கும் நிர்ப்பந்தம் தஜகிஸ்தானிற்கு ஏற்பட்டது.

அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் சீனாவின் மேலாதிக்க போக்கு, தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போது சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள், ஒட்டுமொத்த பாமீர் பகுதியும் தங்களுக்கே சொந்தம் என பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருப்பது தஜகிஸ்தானிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

china,threat,central asian country,tajikistan ,சீனா, அச்சுறுத்தல், மத்திய ஆசிய நாடு, தஜிகிஸ்தான்

சீனாவின் புராதனமான பகுதியாக பாமீர் இருந்ததாகவும், உலக வல்லரசுகளின் அழுத்தம் காரணமாக, பாமீர் 128 ஆண்டுகளாக சீனாவுக்கு வெளியே இருப்பதாக, சீன வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தஜகிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கங்களை சீனா குறிவைத்துள்ளதால், தஜகிஸ்தானில் உள்ள பகுதிகளை சீனா ஆக்கிரமிக்க நினைப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லை பகுதியை சீனா வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றபோது, இந்திய-சீன வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது சீனா பல நாடுகளுடன் மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தஜகிஸ்தான் நாட்டுடனும் மோதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

Tags :
|
|