Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பற்றி தெரிவிக்காமல் துரோகம் இழைத்தது சீனா; மீண்டும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா பற்றி தெரிவிக்காமல் துரோகம் இழைத்தது சீனா; மீண்டும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 06 July 2020 09:20:09 AM

கொரோனா பற்றி தெரிவிக்காமல் துரோகம் இழைத்தது சீனா; மீண்டும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்தது, துரோகம் இழைத்தது, மூடி மறைக்கப் பார்த்தது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டி உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 205க்கும் அதிகமான உலக நாடுகளுக்கு பரவி உள்ளது. இதில் முக்கியமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.

china,corona,virus,import,mask ,சீனா, கொரோனா, வைரஸ், இறக்குமதி, முகக்கவசம்

இந்நிலையில் கொரோனா குறித்து உண்மையை மறைத்துவிட்டது என்று பல்வேறு தருணங்களிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இதற்கு சீனா மறுப்பும் தெரிவித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் சீனா மீது தன் குற்றச்சாட்டை வைத்துள்ளார் டிரம்ப். கொரோனா பரவலுக்கு சீனாவை முழு அளவில் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்தது. துரோகம் இழைத்து விட்டது. அமெரிக்கா தற்போது உள்நாட்டிலேயே முகக்கவசம், பாதுகாப்பு கவசம் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வருகிறது. முன்பு இந்தப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|
|