Advertisement

அமெரிக்க தூதர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த சீனா

By: Nagaraj Sat, 12 Sept 2020 08:53:30 AM

அமெரிக்க தூதர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த சீனா

வலுக்கும் மோதல்... அமெரிக்கா, சீனா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

உலகில் கொரோனா பரவலுக்குப் பின்னர் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவுடனான வணிக தொடர்புகளை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இதனிடையே அமெரிக்காவின் ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம் தைவான் மற்றும் தென் சீனக்கடல் பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் சீன பத்திரிக்கையாளர்கள், ஆதிகாரிகளுக்கு விசா தடைகளை அறிமுகப்படுத்திய அமெரிக்கா ஹூஸ்டனில் இருந்த சீனத் துணைத்தூதரகத்தையும் மூட உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக சீனாவில் செங்குடுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முட சீனா உத்தரவிட்டது.

china,united states,ambassadors,report,regulations ,சீனா, அமெரிக்கா, தூதர்கள், அறிக்கை, கட்டுப்பாடுகள்

இதனை தொடந்து இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தூதர்களுக்கு அமெரிக்கா சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அமெரிக்கா தூதர்கள் சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருகை தரவேண்டும் என்றாலோ அல்லது உள்ளூர் அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றாலோ சீன அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் அதன் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|