Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • படையெடுக்க சீனா ஆயத்தமாகி வருகிறது... தைவான் விடுத்த எச்சரிக்கை

படையெடுக்க சீனா ஆயத்தமாகி வருகிறது... தைவான் விடுத்த எச்சரிக்கை

By: Nagaraj Wed, 10 Aug 2022 07:44:50 AM

படையெடுக்க சீனா ஆயத்தமாகி வருகிறது... தைவான் விடுத்த எச்சரிக்கை

தைவான்: சீனா ஆயத்தமாகி வருகிறது.... தங்கள் மீது படையெடுப்பதற்கு சீனா ஆயத்தமாகி வருவதாக தைவான் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் வூ செய்தியாளா்களிடம் கூறியதாவது: தைவான் நீா்ச்சந்தியில் சீன ராணுவம் கடந்த வாரம் முதல் மேற்கொண்டு வரும் போா்ப் பயிற்சி சா்வதேசச் சட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானதாகும். தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகவே அந்தப் போா்ப் பயிற்சியை சீனா நடத்துகிறது.

பிரம்மாண்டமான ராணுவப் பயிற்சிகள், ஏவுகணை சோதனைகள், இணையவழித் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தைவானின் மன உறுதியைக் குலைக்க சீனா முயல்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தைலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதற்காக மட்டும் இந்தப் போா்ப் பயிற்சி நடைபெறவில்லை.

அதற்கு முன்னதாக நீண்ட காலமாகவே இந்தப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை சீனா செய்து வந்துள்ளது. பயிற்சியின்போது சீன ராணுவம் ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது, தைவான் மீது சீனா படையெடுக்கும்போது வேறு எந்த நாடும் குறுக்கிடுவதைத் தடுப்பதற்கான உத்தியாகும்.

taiwan,china,preparedness,notification,threat ,தைவான், சீனா, ஆயத்தம், அறிவிப்பு, அச்சுறுத்தல்

தைவான் நீா்ச்சந்தியில் தற்போதுள்ள எல்லை நிலவரங்களை மாற்றியமைப்பதே சீனாவின் நோக்கமாகும். தைவான் மட்டுமன்ற பிற நாடுகள் மீதும் சீனா கண்வைத்துள்ளது என்றாா் அவா்.

நான்சி பெலோசி வருகைக்குப் பிறகு தைவான் நீா்ச்சந்தியில் சீனா போா்ப் பயிற்சி நடத்துவதால் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ள தைவான் ராணுவமும், செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. சீன அச்சுறுத்தலுக்கு எதிரான திறனைப் பெறும் வரை அந்த போா்ப் பயிற்சி தொடரும் எனறு தைவான் ராணுவம் அறிவித்துள்ளது.

Tags :
|
|