Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தை முன்னிறுத்தி வரும் சீனா

கொரோனா சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தை முன்னிறுத்தி வரும் சீனா

By: Karunakaran Fri, 03 July 2020 2:53:42 PM

கொரோனா சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தை முன்னிறுத்தி வரும் சீனா

கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில் சீனாவில் கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின் தற்போது மீண்டும் அங்கு கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸுக்கு தற்போது வரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு வகையில் பாரம்பரிய மருத்துவ முறை கையாளப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரிய சீன மருத்துவம், உலகில் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மூலிகை கசாயங்கள் முதல் டாய்ச்சியின் அக்குபங்சர் வரை பல வகையான சிகிச்சை முறைகள் இந்த சீன மருத்துவத்தில் அடங்கும்.

chinese medicine,traditional  medicine,china,corona treatment ,சீன மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சீனா, கொரோனா சிகிச்சை

பல தலைமுறைகளாக சீனாவில் சீன மருத்துவம் மிகவும் பிரபலமாக உள்ளது. பாரம்பரிய சீன மருத்துவத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரப்புவதற்கு சீனா முயல்வதாக பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2003ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலிருந்து, சீன பாரம்பரிய மருத்துவ முறையின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

லியான்ஹுவா குவிங்வென், ஜின்ஹுவா குவிங்கன் என ஆறு பாரம்பரிய சிகிச்சை முறைகள் கொரோனா சிகிச்சைக்கு என விளம்பரம் செய்யப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது என சீன பாரம்பரிய மருத்துவத்தின் ஆதரவாளர்கள் கூறினாலும், இவை பாதுகாப்பானவை என அறிவிக்கும் முன் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

Tags :
|