Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய தரப்புடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது - சீன ராணுவ அமைச்சகம்

இந்திய தரப்புடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது - சீன ராணுவ அமைச்சகம்

By: Karunakaran Fri, 27 Nov 2020 12:24:41 PM

இந்திய தரப்புடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது - சீன ராணுவ அமைச்சகம்

இந்தியா, சீனா இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் தொடங்கி கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி தந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இரு தரப்பும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரை குவித்து, அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அந்த பகுதியில் அமைதியையும், சமாதானத்தையும் மீட்டெடுப்பதற்காக இரு தரப்பு ராணுவமும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 6-ந் தேதி, இரு தரப்பினரிடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

china,indian side,chinese ministry of defense,ladakh ,சீனா, இந்திய தரப்பு, சீன பாதுகாப்பு அமைச்சகம், லடாக்

இந்நிலையில் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று காணொலி காட்சி வழியாக பேட்டி அளித்தபோது, சீன, இந்திய படைகளின் தளபதி மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லை பகுதிகளின் நிலைமை ஒட்டுமொத்தமாக நிலையாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் எல்லையின் மேற்கு செக்டாரில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் படைகளை விலக்கிக்கொள்வதை ஊக்குவிப்பதற்கு இரு நாடுகளும் நேர்மையான, ஆழமான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை பேணி வருகின்றன என்று கூறினார்.

மேலும் அவர், இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வமுடன் செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு தரப்பு படைகளும் எல்லையில் கட்டுப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. தவறான புரிந்து கொள்ளுதலும், தவறான கணக்கீடும் தவிர்க்கப்படுகிறது. ராணுவம் மற்றும் ராஜதந்திர வழிகளில் இந்திய தரப்புடன் தொடர்புகளை பேணுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று கூறினார்.


Tags :
|