Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா தாஷ்குர்கன் மலையில் சர்ச்சைக்குரிய விமான நிலையம் கட்டி வருவதாக தகவல்

சீனா தாஷ்குர்கன் மலையில் சர்ச்சைக்குரிய விமான நிலையம் கட்டி வருவதாக தகவல்

By: vaithegi Thu, 16 June 2022 08:16:24 AM

சீனா தாஷ்குர்கன் மலையில் சர்ச்சைக்குரிய விமான நிலையம் கட்டி வருவதாக தகவல்

சீனா: வடமேற்கு சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான ஜின்ஜியாங்கில், சீன அரசு புதிய விமான நிலையம் ஒன்றை கட்டி வருவதகா தகவல் வெளிவந்துள்ளது .தாஷ்குர்கன் மலை பகுதியில் அமையும் இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 3,258 மீ உயரத்தில் உள்ளது,

இது சீனாவின் மிக உயரமான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையம் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் ஓடு பாதைகள், ராணுவ போர் விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் தரை இறங்கும் வகையில் இரட்டை பயன்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் இருந்து வெளிவரும் புலனாய்வு இதழ் ஒன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும், அடுத்த மாதம் இந்த விமான நிலையத்தை திறக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

tashkurgan hill,autonomous,airport ,தாஷ்குர்கன் மலை,தன்னாட்சி ,விமான நிலையம்

போர் அல்லாத நடவடிக்கைகளில் சீன ராணுவத்தை அனுமதிப்பது மற்றும் வெளிநாடுகளில் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது குறித்த சாலமன் தீவுகளுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்து போட்டுள்ளதாகவும், சீன புலனாய்வு இதழ் கூறியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் தைவான் மீது படையெடுக்க பெய்ஜிங் தயாராகி வருவதாகவும் அதற்காக தான் தாஷ்குர்கன் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சீன புலனாய்வு இதழ் ஒன்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


Tags :