Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அளவிடுகிறது சீனா!

மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அளவிடுகிறது சீனா!

By: Monisha Thu, 28 May 2020 12:02:04 PM

மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அளவிடுகிறது சீனா!

எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே உயரமான சிகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதன் உயரம் 8,848 மீட்டர் ஆகும். 1954-ம் ஆண்டு இந்தியா எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டு சொல்லியது. இந்த அளவு பலராலும் ஏற்கப்பட்டு வந்தது.

ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 8,844.43 மீட்டர் என்று சீனா சொல்கிறது. நேபாளமோ அதில் இருந்து 4 மீட்டர் உயரத்தை குறைத்து சொல்கிறது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது.

india,mount everest,world tallest peak,china,nepal ,இந்தியா,எவரெஸ்ட் சிகரம்,உலகிலேயே உயரமான சிகரம்,சீனா,நேபாளம்

எனவே சீனா எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளவிடுவதற்கு ஒரு குழுவை அனுப்பி உள்ளது. அந்தக் குழு திபெத் வழியாக நேற்று அங்கு சென்று அடைந்தது. இந்த குழு பனிமூடிய சிகரத்த்தில் கணக்கீடு செய்வதற்காக ஒரு மார்க்கரை அமைக்க தொடங்கினர்.

ஏற்கனவே சீன குழுவினர் 1975-ல் இரு முறை அளவிட்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.13 மீட்டர் என்றும், 2005-ல் அளவிட்டு 8844.43 மீட்டர் என்றும் கூறியது. தற்போது மூன்றாவது முறையாக அளக்க துவங்கி உள்ளது.

Tags :
|
|