Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

By: Karunakaran Mon, 13 July 2020 11:20:53 AM

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின், எல்லையில் போர் மூளும் பதற்றம் நிலவியது. இருப்பினும் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக நிலை ஏற்பட்டு, எல்லையில் இருந்த சீன படைகள் பின்வாங்கின. நாடு முழுவதும் இந்த எல்லை பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கருத்துக்கள தெரிவித்து வருகின்றனர்.

china,indian soil,modi,rahul gandhi ,சீனா, இந்திய மண், மோடி, ராகுல் காந்தி

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதுஎன விமர்சித்துள்ளார். மேலும் அவர் இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாக ஆங்கில இணையதள பத்திரிகைக்கு கர்னால் அஜய் சுக்லா அளித்த பேட்டியை சுட்டிக்காட்டியுள்ளார்.

மோடி ஆட்சியில் இந்தியாவின் புண்ணிய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|