Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா அல்லது பாகிஸ்தானின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம்-நிதின் கட்காரி

சீனா அல்லது பாகிஸ்தானின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம்-நிதின் கட்காரி

By: Karunakaran Mon, 15 June 2020 10:51:54 AM

சீனா அல்லது பாகிஸ்தானின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம்-நிதின் கட்காரி

சமீபத்தில் லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே மோதல் நடைபெற்றது. இதனால் இரு நாடுகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநில பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘ஜன் சம்வாத்’ பேரணியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டபோது, அண்டை நாடுகளின் நிலப்பகுதிகள் இந்தியாவுக்கு வேண்டாம் என்று கூறினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஒரு எல்லையில் பாகிஸ்தானும் மறு எல்லையில் சீனாவும் உள்ளன. நாங்கள் விரும்புவது அமைதியும், அகிம்சையுமே ஆகும். ஆக்கிரமிப்பு செயல்கள் மூலம் இந்தியாவை வலுவான நாடாக்க மாட்டோம். அமைதி ஏற்படுத்துவதில் வலிமையான நாடு என்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம் என்று கூறினார்.

china,pakistan,india border,nitin gadkari ,இந்தியா,சீனா,பாகிஸ்தான்,நிதின் கட்காரி

சீனாவோ அல்லது பாகிஸ்தானோ, அவர்களின் நிலப்பகுதி இந்தியாவுக்கு வேண்டாம். மாறாக அமைதி, நட்பு, அன்பு, இணைந்த செயல்பாடு ஆகியவற்றையே நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தானுடனான 1971-ம் ஆண்டு போர் வெற்றிக்குப்பின், பூடான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளின் நிலத்தை அபகரிக்க இந்தியா ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஒரு அங்குல நிலத்தை கூட நாங்கள் எடுக்கவில்லை என்று நிதின் கட்காரி கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்து பேசிய அவர், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நமது நாடும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவல்படி, நாம் விரைவில் தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|