Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலத்தை அனுப்பியது சீனா

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலத்தை அனுப்பியது சீனா

By: Nagaraj Fri, 24 July 2020 11:34:05 AM

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலத்தை அனுப்பியது சீனா

செவ்வாய் கிரகத்திற்கு சீனா விண்கலம் அனுப்பியது... சீன விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தியான்வென் 1 ரோவர், வெற்றிக்கரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 5 ஒய் 4 ராக்கெட் மூலம் தியான்வென் -1 ரோவரை அதன் சுற்றுப்பாதைக்கு சீனா அனுப்பியது. 7 மாத விண்வெளி பயணத்துக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு தியான்வென் 1, செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும், அதன் பிறகு கிரகத்தின் ஆய்வு தரவுகளை வழங்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

mars,china,rover,research data,scientists ,செவ்வாய் கிரகம், சீனா, ரோவர், ஆய்வு தரவுகள், விஞ்ஞானிகள்

வரும் 30ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா விண்கலன் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு போட்டியாக முன்கூட்டியே விண்கலத்தை சீனா அனுப்பி உள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை அமெரிக்கா மூட கூறி உத்தரவிட்டதற்கும் சீனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. ஒரு பக்கம் கொரோனா பிரச்னை, மறுபக்கம் கனமழை வெள்ளம், அமெரிக்காவின் நெருக்கடி என்று தவித்து வந்தாலும் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பி உள்ளது சீனா.

Tags :
|
|
|