Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

By: Karunakaran Sun, 20 Sept 2020 11:44:40 AM

டிக்-டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதன்பின், அமெரிக்காவிலும் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.

பின்னர் சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந் தேதி கையெழுத்திட்டார். இதனையடுத்து டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.

china,condemns,us,tiktok ,சீனா, கண்டனம், அமெரிக்கா, டிக்டோக்

தற்போது, டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீ சாட் செயலியை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம் இந்த தடை “துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் அடக்குவதற்கு அமெரிக்கா பலமுறை அரசு அதிகாரத்தை பயன்படுத்தியது. இது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்கா உடனடியாக கொடுமைபடுத்துதலை நிறுத்தி சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|