Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

By: Karunakaran Tue, 13 Oct 2020 2:03:10 PM

சீனா புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், சீனா நேற்று தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீன நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதுகுறித்த சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

china,optical remote sensing,satellite,lauching ,சீனா, ஆப்டிகல் ரிமோட் சென்சிங், செயற்கைக்கோள், ஏவுதல்

நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டின் பிற்பகுதியில் 6 ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.

தற்போது மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. உலகமே பொருளாதாரத்தில் சிக்கியுள்ள நிலையில், அங்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவ மற்றும் விண்வெளி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Tags :
|